Home தாயக செய்திகள் விபத்தில் மூன்று இளைஞர்கள் பலி – மூவர் படுகாயம்!

விபத்தில் மூன்று இளைஞர்கள் பலி – மூவர் படுகாயம்!

191
0

மட்டக்களப்பு வந்தாறுமூலை சந்தைக்கு அருகில் மூன்று மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி இரண்டு மோட்டர் சைக்கிள்கள் தீப்பற்றி எரிந்ததில் மூவர் உயிரிழந்தள்ளனர். 

நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு விபத்து இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர். 

வேப்பவுஸ் வீதி பலாச்சோலை வந்தாறுமூலையைச் சேர்ந்த 22 வயதுடைய மோகன் மயூரன், வேப்பவுஸ் 3 ம் குறுக்கு வீதி பலாச்சோலை வந்தாறுமூலையைச் சேர்ந்த 23 வயதுடைய முருகுப்பிள்ளை பவித்திரன் ஆகியோர் இவ்வாறு உயிரிழந்ததுடன் தீப்பற்றி எரிந்தவர் அடையாளம் காணப்படவில்லை . 

படுகாயமடைந்த நிலையில் 3 பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, உயிரிழந்தவர்களின் சடலம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.