Home உலக செய்திகள் மூன்றாவது முறையாகவும் “பிறேக்சிட்” தீர்மானம் தோல்வி!

மூன்றாவது முறையாகவும் “பிறேக்சிட்” தீர்மானம் தோல்வி!

207
0

ஐரோப்பிய யூனியலிருந்து இங்கிலாந்து வெளியேறுவது தொடர்பாக  பிரதமர் தெரசா மே கொண்டு வந்த தீர்மானம் மூன்றாவது முறையாக தோல்வி அடைந்தது.

நேற்று பிரித்தானிய பாரளுமன்றில் நேற்று (29/03) இடம்பெற்ற இவ் வாக்கெடுப்பின் போது பிரதமர் தெரேசா மே முன்வைத்த தீர்மானத்திற்கு எதிராக 58 வாக்குகள் விழுந்த நிலையிலேயே மூன்றாவது தடைவையாகவும் தோற்றுள்ளார்.

இவ் வாக்கெடுப்பு நடந்து கொண்டிருந்த சம நேரத்தில் பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு முன்பாகவும், ரவல்கர் ஸ்குயர், டவுனிங் ஸ்றீட் முன்பாகவும், பாரிய ஆர்ப்பாட்ட போராட்டம் இடம்பெற்றது.

ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது தொடர்பான பிரெக்ஸிட் தீர்மானத்தின் மீது 2016-ல் இங்கிலாந்தில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு பெரும்பாலான மக்களின் வாக்குகளை பெற்று அதனடிப்படையில், ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான விதிமுறைகள், நிபந்தனைகளைக் கொண்ட பிரெக்ஸிட் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது.

ஆனால் இந்தத் தீர்மானம் மூன்றாவது முறையாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தோல்வி அடைந்துள்ளதால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திடம் ஏப்ரல் 12-ம் தேதிக்குள் பிரிட்டன் தெரிவிக்க வேண்டும்.

இந்த நிலையில் மீண்டு பிரெக்ஸிட் தொடர்பான தீர்மானத்தைக் கொண்வர தெரசா மே தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.