Home முக்கிய செய்திகள் சித்திரவதைகள் தொடர்பாக ஆராய இலங்கை வருகிறது ஐ.நா உப குழு!

சித்திரவதைகள் தொடர்பாக ஆராய இலங்கை வருகிறது ஐ.நா உப குழு!

221
0

சித்திரவதைகளுக்கு எதிரான நடவடிக்கை தொடர்பாக ஆராய்வதற்கு ஐ.நா. உபகுழு ஒன்று இலங்கைக்கு முதலாவது பயணத்தை மேற்கொள்ளவுள்ளது.

நான்கு பேர் கொண்ட இக் குழுவினர் பத்து (10) நாட்கள் இலங்கையில் தங்கியிருந்து தமது ஆய்வை மேற்கொள்ள உள்லதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விக்டர் சகாரியா தலைமையிலான இந்தக் குழுவில், சத்யபூசண் குப்தா டோமா, பெட்ரோஸ் மைக்கலிடேஸ், ஜூன் லொபீஸ் ஆகியோர் அடங்குகின்றனர்.

இலங்கையில் சித்திரவதைக்கு எதிரான மற்றும் மோசமான நடத்தைக்கு எதிரான பாதுகாப்பு குறித்து இந்தக் குழு ஆய்வுகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கைதிகள், கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட தமிழர்கள் தொடர்பான விடயங்களில் இலங்கை மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த குழு, இந்த விடயங்கள் தொடர்பாக ஆராயும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கு முன்னர், பிரித்தானியா, காபோன், செனகல், கானா, பல்கேரியா ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்யவுள்ளதாக அறிவித்திருந்த இந்தக் குழு, தற்போது மேலதிகமாக இலங்கை, ஆஜென்ரீனா, பலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கும் விஜயம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.