Home தாயக செய்திகள் கைவிடப்பட்ட நிலையில் வேலணை ஆத்திசூடி பாடசாலை!

கைவிடப்பட்ட நிலையில் வேலணை ஆத்திசூடி பாடசாலை!

227
0

பற்றைக் காடுகளால் மூடப்பட்டு, இடிபாடுகளுடன் கைவிடப்பட்ட நிலையில் வேலணை ஆத்திசூடி பாடசாலை காணப்படுகிறது.

வேலணை வடக்கு மயிலப்புலம் கிராமப் பகுதியில் அமைந்துள்ள வேலணை ஆத்திசூடி பாடசாலையின் இன்றை தோற்றம் மனவருத்தம் அளிப்பதாக கிராம வாசி ஒருவர் தெரிவித்தார்.

அவர் கூறுகையில்,

இப்பாடசாலை பலநூற்றுக்கணக்கான மாணவர்களை உருவாக்கிய தமிழ் மணம் பரப்பிய பாடசாலை .1990ம் ஆண்டுவரை இயங்கிய பாடசாலை நாட்டின் யுத்த சூழ்நிலையால் மூடப்பட்டது. இக்கிராம மக்களும் இடம்பெயர்ந்து உலகம் பூராகவும் புலம்பெயர்ந்து வசிக்கின்றனர்.

போதிய பாதுகாப்பும் சுதந்திரமும் இல்லாத போதும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட தமது சொந்த ஊர்களுக்கு மக்கள் திரும்பி வரும் நிலையில் இங்கு (வேலணை வடக்கு மயிலப்புலம்) மீளவும் வந்தோர் மிககுறைவு.

பாடசாலையும் அதனை சுற்றியுள்ள குடிமனையும் புதர்மண்டி சிறு காடுகளாகவே உள்ளது.
கட்டடங்களை மூடி காணிகளும் களனிகளும் தெரியாதளவுக்கு பற்றைகளாகவே உள்ளது.
பாடசாலையும் அதேபோல் காடுமண்டி கிடக்கின்றது.

புலம்பெயர் தேசங்களில் பாடசாலையின் பெயரினைத் தாங்கிய பல சங்கங்களும் அமைப்புகளும் உள்ளது .இருந்தும் இப் பாடசாலையை கவனிப்பாரற்று உள்ளது.

இது வேதனைக்குரிய விடையம். எனவே கவனிப்பாரற்று அழியும் நிலையில் உள்ள இப் பாடசாலையை மீளவும் இயக்க நடவடிக்கை எடுக்க இவர்கள் முன்வரவேண்டும் என்றார்.