Home தாயக செய்திகள் 9 பாடங்களிலும் “A” சித்தி பெற்ற முல்லை மாணவி!

9 பாடங்களிலும் “A” சித்தி பெற்ற முல்லை மாணவி!

510
0

நடந்து முடிந்த 2018 ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் ஒன்பது பாடங்களிலும் உயர் நிலையான “A” பெற்று சித்தியடைந்துள்ளார் ஜானுஷா.

முல்லைத்தீவு வித்தியானந்த கல்லூரி மாணவியான ஜானுஷா வீட்டின் வறுமை உட்பட பல கஷ்டங்களுக்கு மத்தியில் முன்னேற வேண்டும் என்ற இலக்கோடு கல்வி கற்று முன்னிலையில் சித்தியடைந்துள்ளதோடு பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

ஜானுஷா சிறு வயதிலேயே தந்தையை இழந்து துன்பங்கள் பல சுமந்து தாயின் அரவைணப்பில் வாழ்ந்து வந்த சாதனைப் பெண் ஆவார்.