Home செய்திகள் தாம் கையொப்பமிட்ட உடன்படிக்கைகளை கிளித்தெறிந்த மஹிந்த: சந்திரிகா

தாம் கையொப்பமிட்ட உடன்படிக்கைகளை கிளித்தெறிந்த மஹிந்த: சந்திரிகா

411
0

தமது காலத்தில் பல மின் உற்பத்தி நிலையங்களை ஆரம்பித்த போதும், தாம் கையொப்பமிட்ட உடன்படிக்கைகளை கிழித்து எறிந்த ராஜபக்ஸ அரசாங்கம், கைச்சாத்திட்டத்தை விட இரண்டு மடங்கு செலவில் நுரைச்சோலைக்கு கைச்சாத்திட்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டார்.

நாட்டில் நிலவும் மின்சாரப் பிரச்சினை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து கூறுகையில்…

நுரைச்சோலையைத் தாம் சீனாவின் சிறந்த நிறுவனத்திற்கே வழங்கியதாகவும் அதிக தரகுப் பணம் கேட்டமையினால், அரசாங்கத்தின் முன்னாள் தலைவர்களில் ஒருவர் அந்நிறுவனத்தை மூடிக்கொண்டு சென்றதாகவும் மேலும் குறிப்பிட்ட சந்திரிக்கா

எனினும் பின்னர் இரண்டு சதத்திற்கும் உதவாத சீனாவின் நிறுவனம் ஒன்றுக்கு அதனை வழங்கியதால், 38 தடவைகள் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் சீர்குலைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.