Home முக்கிய செய்திகள் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவு – 18ம் இடத்திற்கு பின் நகர்ந்த யாழ் மாவட்டம்!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவு – 18ம் இடத்திற்கு பின் நகர்ந்த யாழ் மாவட்டம்!

290
0

2018 ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று மாலை வெளியாகியுள்ள நிலையில் முதல் மூன்று இடங்களையும் தென்னிலங்கை மாவட்டங்கள் பிடித்துள்ளன.

முறையே மாத்தற, ஹம்பகா, கொழும்பு ஆகிய மாவட்டங்கள் முதல் மூன்று இடங்களையும் பிடித்துள்ளது.

இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்காக 656, 641 மாணவர்கள் தோற்றியிருந்த போதும் 235,373 மாணவர்கள் மட்டுமே சித்தி பெற்று உயர் கல்விக்கு செல்லவுள்ளனர்.

இதேவேளை, பரீட்சைக்கு தோற்றிய 969 மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகளை இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

யாழ் மாவட்டத்தில் 17,495 மாணவர்கள் பரீட்சை எழுதியிருந்த்அ போதும் 6,337 பேர் மட்டுமே சித்தியடைந்துள்ளனர்.

முன்னைய காலங்களில் அகில இலங்கை ரீதியில் கல்வியில் முன்னிலை வகித்துவந்த யாழ் மாவட்டம் இம் முறை தேர்வு முடிவுகளின் படி மாவட்ட ரீதியில் 18 ஆம் இடத்திற்கு பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி வட மாகாணத்திலேயே மூன்றாம் இடத்திற்கு வந்துள்ளமை அவதானிக்க முடிகிறது.

மிகப்பெரும் அறிஞ்ஞர்கள், பேராசிரியர்கள், வைத்தியர்கள் உட்பட பல்துறை நிபுணர்கள், புலவர்கள் என பலரை உருவாக்கிய யாழ் மாவட்டம் இன்று கல்வியில் படு பாதாளத்தை நோக்கி செல்வதானது அனைவரின் அக்கறையின்மையை காட்டி நிற்கிறது.

போர்ச் சூழல், இராணுவ பிரசன்னம், போதைவஸ்து கலாச்சாரம், கலாச்சார சீரழிவு, மாணவர்களை கண்டிக்க ஆசிரியர்கட்கு அனுமதியின்மை, வீடுகளில் பெற்றோர் கட்டுப்பாடு, கண்டிப்பை கைவிட்டமை அல்லது குறைத்தமை போன்ற காரணங்களே கல்வியில் யாழ் மாவட்டம் பிந்தங்கியுள்ளமைக்கான காரணங்களாக காணப்படுகிறது.

தமிழர் தாயகத்தில் வடக்கில் 5 மாவட்டங்களூம், கிழக்கில் 3 மாவட்டங்களும் இருந்தாலும் யாழ் மாவட்டத்தை குறிப்பிட்டு சொல்வதன் காரணம் பல ஆண்டு காலமாக கல்வியில் முதல் இடத்திலேயே இருந்து வந்த யாழ் மாவட்டம் மகிந்த ஆட்சிக்காலத்தில் இருந்து பின்னோக்கி மெல்ல மெல்ல நகர்ந்து இன்று 18 ஆம் இடத்தை அடைந்திருப்பதானது மிகப்பெரும் தாக்கத்தையும், மாற்றத்தையும் சுட்டிக்காட்டி நிற்பதாலேயே.

2018 ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோன்றிய மாணவர்கள், சித்தி பெற்ற மாணவர்கள் மற்றும் வீதாசாரத்தை மாவட்ட ரீயில் புள்ளி விபரங்களாக கீழுள்ள அட்டவணையில் காணலாம்.