Home செய்திகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக யசந்த கோத்தாகொட நியமனம்:

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக யசந்த கோத்தாகொட நியமனம்:

186
0

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக யசந்த கோத்தாகொட பதவியேற்றுள்ளார்.

இவருடைய நியமனத்திற்கு கடந்த 24 ஆம் திகதி அரசியலமைப்பு குழு அங்கீகாரம் வழங்கியிருந்த நிலையில், ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று (28/03) அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

சட்டத்துறையில் நீண்ட அத்தியாயத்தைக் கொண்ட யசந்த கோத்தாகொடமேலதிக சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் ஜனாதிபதி ஆலோசகராக பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.