Home உலக செய்திகள் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு – 10 வயது சிறுவனின் சாதனை பயணம்!

தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு – 10 வயது சிறுவனின் சாதனை பயணம்!

217
0

தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு கடல்வழியாக நீந்திச் சென்று சாதனை படைப்பதற்காக தமிழகத்தை சேர்ந்த 10 வயதுச் சிறுவன் இன்று காலை நீந்த ஆரம்பித்துள்ளார்.

தமிழகம் தேனி மாவட்டத்தை – இராமேஸ்வரத்தை சேர்ந்த 10 வயதுடைய ஜெய்ஜஸ்வந்த் என்ற மாணவனே இச் சாதனைப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

இச் சாதனையை நிலைநாட்டுவதற்காக நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து அவருடைய தந்தை மற்றும் பயிற்சியாளர், வழிகாட்டு குழுக்கள் 15 பேருடன் விசைப்படகு மூலம் ஜெய்ஜஸ்வந்த் தலைமன்னாரை வந்தடைந்திருந்தார்.

இன்று காலை 2:00 மணிக்கு கடலில் குதித்து தனது சாதனைப் பயணத்தை ஆரம்பித்துள்ள ஜெய்ஜஸ்வந்த் 30 மைல் தூரத்தை 14 மணித்தியாலங்களில் நீந்திச் சென்று இந்று பி.ப 4:00 மணிக்கு தனுஷ்கோடி, அரிசல்முனை பகுதியை சென்றடையவுள்ளார்.

1994ம் ஆண்டு, குற்றாலீஸ்வரன் என்பவர் தனது 12வது வயதில் இக்கடல் பகுதியை 16 மணி நேரத்தில் நீந்தி கடந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.