Home தாயக செய்திகள் கவனிப்பாரற்ற நிலையில் ஆனைவிழுந்தான் கிராமம் – அடிப்படை வசதிகளின்றி மக்கள் அவதி!

கவனிப்பாரற்ற நிலையில் ஆனைவிழுந்தான் கிராமம் – அடிப்படை வசதிகளின்றி மக்கள் அவதி!

165
0

வடமாகாணம் – கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள ஆனைவிழுந்தான் கிராமம் கவனிப்பாரற்று இருப்பதால் எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி அவதியுறுவதாக அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள ஆனைவிழுந்தான் கிராமத்தில் தற்போது 414 மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 383இற்கும் அதிக மக்கள் மீள்குடியேறி வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த கிராமத்தின் பிரதான வீதி முதல் ஏனைய குடியிருப்பு வீதிகள் வரை எந்த வீதிகளும் இதுவரை புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுவதனால் இங்குள்ள மக்கள் அன்றாடம் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இப்பகுதியில் மாணவர்களுக்கான சீரான கல்வி வசதி மற்றும் ஏனைய அடிப்படை வசதிகள் இன்றியும் தொழில் வாய்ப்புக்களின்றியும் இங்குள்ள மக்கள் அன்றாடம் சொல்லொணா துன்பங்களை எதிர்கொள்வதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.