Home செய்திகள் உதவி எனும் போர்வையில் பாலியல் வன்கொடுமை!

உதவி எனும் போர்வையில் பாலியல் வன்கொடுமை!

309
0

வசதிகள் அற்ற ஏழை குடும்பங்களை உதவிகள் செய்யும் போர்வையில் பாலியல் பலாத்தாரம் செய்யும் கலாச்சாரம் வடபகுதியில் அதிகரித்து வருவது வேதனைக்குரிய விடையமாக அமைந்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தின் கீழ் இருந்த போது பெண்ணியம் எந்த ஒரு களங்கமுமின்றி காப்பாற்றப்பட்டு வந்திருந்தது.

போரின் பின்னரான காலப்பகுதியில் வீடு, உறவு, உடைமை என அனைத்தையும் இழந்து ஏதிலிகளாக மற்றவர்களிடம் கையேந்தும் நிலையில் வாழும் துர்ப்பாக்கிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ள தமிழ் மக்களை தமது இச்சைக்காக உதவிகள் எனும் பெயரில் அணுகி பின் பலாத்காரமாகவும், ஏதோ ஒரு வகையில் இணங்க வைத்தும் பாலியல் கொடுமை புரியும் மனித நேயமற்ற மிருகங்கள் இனம் காணப்பட்டு தண்டிக்கப்படவேண்டியவர்களே.

இந்த வகையில் அண்மையில் கிளிநொச்சி பகுதியில் குடும்ப பெண் ஒருவருக்கு நீண்டகாலமாக உதவிகள் செய்துவந்த உறவினர் ஒருவர் தாயகம் சென்றிருந்த போது ஏதோ ஒரு விதமாக அவரை தனது வலையில் வீழ்த்தி உடலுறவு கொண்டு அதனை காணொளிப்பதிவு செய்துள்ளார்.

பின்னர் அவர் அக் காணொளியை குறித்த பெண்ணின் மகளுக்கு அனுப்பி நீ என்னுடன் உறவுக்கு சம்மதிக்காவிட்டால் இக் காணொளியை அனைத்து சமூக வலத் தளங்களிலும் வெளியிடப் போவதாகவும், அதன் பின் உங்கள் குடும்பமே தற்கொலை செய்ய வேண்டியது தான் எனவும் மிரட்டி வருகிறார்.

இவ் ஈனச் செயலைச் செய்தவர் சுவிஸ் நாட்டில் குடியுரிமை பெற்று அந் நாட்டின் சூரிச் பகுதியில் வசிப்பவர் என தெரிய வந்துள்ளது. அத்தோடு அவர் திருமணமாகி மூன்று பிள்ளைகள் இருப்பதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே சுவிஸ் குமார் என்பவர் தலைமையில் புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்கொடுமை மூலம் படுகொலை செய்யப்பட்டிருந்தமை இங்கு நினைவு கொள்ளத் தக்கது.

இவ்வாறாணவர்களை சுவிஸ்வாழ் தமிழ் மக்கள் இனம் கண்டு அவர்களை சமூகத்திலிருந்து ஒதுக்கி வைப்பதோடு மட்டுமன்றி ஆதாரங்களை திரட்டி சட்டத்தின் மூலம் தண்டிக்கவும் வழி செய்யவேண்டும். அவ்வாறான நடவடிக்கைகளே சமூகத்தை திருத்தவும், தமிழர்கள் தமிழருக்கே உரித்தான உயிரினும் மேலான “மானம்” காத்து கலாச்சாரத்தோடும், பண்பாட்டோடும் வாழ வழி செய்யும்.