Home தாயக செய்திகள் விடுதலைப்புலிகள் அமைப்பு வழங்கிய கட்டடம் மற்றும் காணியை மீளவும் கோர முடியாது: ஆளுநர் சுரேன்

விடுதலைப்புலிகள் அமைப்பு வழங்கிய கட்டடம் மற்றும் காணியை மீளவும் கோர முடியாது: ஆளுநர் சுரேன்

229
0

தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகள் அமைப்பு வழங்கிய கட்டடம் மற்றும் காணியை மீளவும் கோர முடியாது என வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்றைய தினம் இடம்ம்பெற்ர வடமாகாண ஆளுநரின் மக்கள் சந்திப்பின் போது கிளிநொச்சி ஊடக அமையம் தாம் 2009 இற்கு முன்னர் பாவித்த காணியையும் கட்டடத்தையும் இராணுவம் இதுவரை விடுவிக்கவில்லை எனவும் அதனை மீட்டுத் தருமாறும் கேட்டதற்கு பதிலளிக்கும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஆளுனர் சுரேன் பதிலளிக்கையில்,

விடுவிக்கவில்லை என்றால் அதற்கான காரணத்தை கண்டறியுங்கள். அதாவது நோய்க்கான காரணத்தை கண்டறிந்தால்தான் நோயை தீர்க்க முடியும் எனவே இராணுவத்திடம் சென்று ஏன் விடுவிக்கவில்லை என்று கேட்டறியுமாறும் தெரிவித்த ஆளுநர், காணிக்கான ஆவணங்கள் எங்கு இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த ஊடக அமையத்தின் நிர்வாகம், இறுதி யுத்தம் காரணமாக பொது மக்கள் தங்களது உயிர்களை பாதுகாக்க முடியாது சூழல் காணப்பட்டது. பெரும்பாலான பொது மக்கள் தங்களின் சொந்த ஆவணங்களை கூட இழந்திருந்தனர். அதே போன்றே நாமும் குறித்த காணிக்கான ஆவணத்தையும் இழந்துள்ளோம்.

அன்றைய சூழலில் விடுதலைப்புலிகள் நிர்வாகத்தில் குறித்த கட்டடம் ஊடக இல்லமாக கிளிநொச்சி ஊடகவியலார்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது என்பதனை சுட்டிக்காட்டிய போது அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திய ஆளுநர் தடை செய்யப்பட்ட இயக்கம் வழங்கியதை மீளவும் கோர முடியாது என பதிலளித்தமை மக்களிடம் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் விடுதலைப் புலிகள் நிர்வாகத்தில் ஈஅயங்கியதாக சொன்னதை விடுதலைப் புலிகள் வழங்கியதாக சித்தரித்து இராணூவத்திற்கு சாதகமாக பதிலளித்துள்ளார் ஆளுநர் சுரேன்.