Home செய்திகள் வடக்கு, கிழக்கில் எமது கிளைகளும், செயற்பாடுகளும் இடம்பெறும்: மனோ கணேசன்

வடக்கு, கிழக்கில் எமது கிளைகளும், செயற்பாடுகளும் இடம்பெறும்: மனோ கணேசன்

197
0

எதிர்வரும் மாகாணசபை, பாராளுமன்ற தேர்தல்களில், வடக்கு கிழக்கு மாகாணங்களில், ஜனநாயக மக்கள் முன்னணி-தமிழ் முற்போக்கு கூட்டணி தேர்தல் அரசியல் பிரவேசம் இடம்பெறுமானால், அது ஒருபோதும், தமிழர் வாக்குகளை சிதைக்கும் முறையில் அமையாது என ஜனநாயக மக்கள் முன்னணி – தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது முகநூல் பக்கதில் பதிவு செய்துள்ளதாவது;

எதிர்வரும் மாகாணசபை, பாராளுமன்ற தேர்தல்களில், வடக்கு கிழக்கு மாகாணங்களில், ஜனநாயக மக்கள் முன்னணி-தமிழ் முற்போக்கு கூட்டணி தேர்தல் அரசியல் பிரவேசம் இடம்பெறுமானால், அது ஒருபோதும், தமிழர் வாக்குகளை சிதைக்கும் முறையில் அமையாது.

தென்னிலங்கையில் இங்குள்ள “பல இனங்கள் கலந்து வாழும்” அரசியல் யதார்த்தம் கருதி நாம் பெரும்பான்மை கட்சிகளுடன் “தேர்தல் கூட்டை” அமைத்து தமிழ் பிரதிநிதித்துவங்களை உறுதி செய்கிறோம். 

அதுபோல் வடகிழக்கின் “தமிழின” அரசியல் யதார்த்தம் கருதி நாம் அங்குள்ள தமிழ் கட்சியினர், தமிழ் இளையோர் அமைப்பினர், போராட்ட வரலாறு கொண்டோர் ஆகியோருடனேயே “கொள்கை கூட்டை” அமைப்போம்.

பெரும்பான்மை கட்சிகளுக்கு வடக்கு கிழக்கில் நான் ஒருபோதும் களம் அமைத்து கொடுக்க மாட்டேன். இதுபற்றிய அரசியல் முதிர்ச்சியும், அறிவும் எமக்கு உண்டு. எனவே தமிழ் வாக்குகள் சிதறும் என்று எவரும் கவலை கொள்ள தேவையில்லை.

தனிநபர்களின் நலன்களை புறந்தள்ளி, இன நலனை முன்வைத்து, “தமிழர் குடைக்குள்” இருந்தப்படி நாம் நிதானத்துடனும், தூரப்பார்வையுடனும் செயற்படுவோம். என பதிவு செய்துள்ளார்.