Home செய்திகள் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு என்ன வேண்டும் என்பதை அரசியல் கட்சிகள் தீர்மானிக்ககூடாது: ஆளுநர்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு என்ன வேண்டும் என்பதை அரசியல் கட்சிகள் தீர்மானிக்ககூடாது: ஆளுநர்

174
0

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு என்னவேண்டும் என்பதை அரசியல் கட்சிகள் தீர்மானிக்ககூடாது என வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் கூறியுள்ளார். 

நேற்றைய தினம் யாழ்.பழைய பூங்கா வளாகத்தில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூரினார்.

மேலும் அவர் கூறுகையில், 

இலங்கை அரசாங்கம் இனிமேலும் காலதாமதம் காட்டாமல் எடுக்ககூடிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவேண்டும். சாட்சிகள் ஊடாக சந்தேகத்திற்கிடமற்ற முறையில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட இராணுவத்தினருக்கு தண்டணைகளை வழங்கவேண்டும். 

இராணுவத்தில் உள்ள சிலர் குற்றங்களை செய்திருக்கின்றார்கள். அவர்களை எந்த நிலைக்கும் சென்று தண்டிப்பதற்கு தயாராக இருப்பதாக இலங்கையின் இராணுவ தளபதி மகேஸ் சேனநாயக்கவே கூறியுள்ளார். அந்தவகையில் சிவில் சட்டத்தின் கீழும், இராணுவ சட்டத்தின் கீழும் குற்றமிழைத்தவர்களுக்கு இரு தண்டணைகள் வழங்கப்படவேண்டும். 

மேலும் காணாமல்போனவர்கள் அலுவலகம் ஊடாக நடவடிக்கைகளை துரிதப்படுத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை அணுகி உங்களுக்கு என்ன வேண்டும்? நீதி வேண்டுமா? இழப்பீடு வேண்டுமா? என்பதை அவர்களுடைய வாயால் கேட்டு அறியவேண்டும். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு என்னவேண்டும் என்பதை அரசியல் கட்சிகள் தீர்மானிக்ககூடாது. அவ்வாறு தீர்மானிப்பது சாரியானதும் அல்ல.

மேலும் இலங்கை அரசாங்கம் மக்களுக்கு என்ன சொல்கிறதோ அதனையே சா்வதேச சமூகத்திற்கும் சொல்லவேண்டும். 

சர்வதேச சமூகத்திற்கு ஒரு கதையும், இலங்கை மக்களுக்கு இன்னொரு கதையும் கூறக் கூடாது. தங்களால் என்ன செய்ய முடியுமோ அதனையே கூறவேண்டும். செய்ய முடியாத அல்லது செய்ய இயலாத விடயங்களை சர்வதேசத்திற்கு கூற கூடாது. காலத்தை வீணடிக்கும் செயற்பாட்டை நிறுத்தவேண்டும் என்றார்.