Home உலக செய்திகள் இலண்டனில் – கத்திக் குத்துக்கு இலக்காகி தமிழர் பலி!

இலண்டனில் – கத்திக் குத்துக்கு இலக்காகி தமிழர் பலி!

411
0

பிரித்தானியத் தலைநகர் இலண்டனின் பினர் பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகி இலங்கைத் தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இலங்கைத் தமிழரான 54 வயதுடைய ரவி கதிர்காமர் என்பவரே இச் சம்பவத்தில் பலியானவராவார்.

Marsh Food and Wine எனும் வர்த்தக நிலைய உரிமையாளரான ரவி அவர்கள் வழமை போல் நேற்று முந்தினம் (24.03.19) ஞாயிறு காலை 6:00 மணியளவில் தனது வர்த்தக நிலையத்தை திறந்துள்ளார். ஏற்கனவே காத்திருந்த திருடர்கள் திடீரென பாய்ந்து அவரை கத்தியால் குத்தி உள்ளனர். சிலர் கடைக்குள் புகுந்து பணம் உட்பட பல பொருட்களை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவம் இடத்திற்கு விரைந்த பிரித்தானியக் காவல்துறையினர் படுகாயமடைந்த நிலையில் இருந்த ரவி அவர்களை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல முற்பட்ட போதும் இரத்தப்பெருக்கால் அவர் உயிரிழந்துள்ளார்.

காவல்துறையினரால் தடையையல் நிபுணர்கள் வரவளைக்கப்பட்டதோடு, தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்த ரவி அவர்கள் மிகவும் அன்பானவராகவும், சிறந்த மனிதராகவும் எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்படுபவரும் என தெரிவித்த அப்பகுதி மக்கள் அவ்வாறான ஓர் சிறந்த மனிதனை களவிற்காக கொள்ளையர்கள் கொன்றுவிட்டனரே என நினைக்கும் போது மிகவும் கவலையாக உள்ளதாகவும் தெரிவித்தனர்.