Home செய்திகள் இறுதி யுத்தத்தில் பங்காற்றிய அரச ஊழியர்கள்: கோட்டபாய

இறுதி யுத்தத்தில் பங்காற்றிய அரச ஊழியர்கள்: கோட்டபாய

190
0

யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு அரசஊழியர்கள் முக்கிய பங்காற்றியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கோட்டாபய ராஜபக்ஷ இதனை குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் அரசசேவையில் இருந்தவர்களின் செயற்பாடு முக்கிய தேவையான தொன்றாக காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அரசசேவையில் ஏற்படும் பாதிப்புக்கள் நாட்டின் ஆட்சியிலும் ஆதிக்கம் செலுத்துமென கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே இயற்றப்படும் புதிய சட்டங்கள் அரசாங்க ஊழியர்களை பாதுகாப்பதாக அமைய வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.