Home தமிழகச் செய்திகள் இறுதி நேரத்தில் அ.தி.மு.க வுடன் கைகோர்த்த சரத்குமார்!

இறுதி நேரத்தில் அ.தி.மு.க வுடன் கைகோர்த்த சரத்குமார்!

195
0

நாடாளுமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் என தெரிவித்து வந்த சரத்குமார் இன்று அ.தி.மு.க உடன் கூட்டணி வைப்பதாகவும், அதற்கான பிரச்சாரங்களில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று ஊடகங்களிட்அம் தெரிவிக்கையில்;

தொங்கு நாடாளுமன்றம் அமைந்துவிடக் கூடாது எனும் காரணத்தினால் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வை ஆதரிப்பது என முடிவு செய்துள்ளோம். சிறுபான்மையினருக்கு பிரதமர் மோடி காவலராக இருக்க வேண்டும். என்றார்.

கடந்த ஞாயிற்றுகிழமை, கொட்டிவாக்கத்தில் உள்ள சரத்குமாரின் வீட்டில் சரத்குமார் மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் பின்னரே இத் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.