
வடக்கில் மாற்று அரசியலுக்கு தலைமைத்துவம் வழங்குவதற்கு தயாராகவே இருப்பதாக, லெப்டினென்ட் கேர்ணல் ரத்னபிரிய பந்து தெரிவித்துள்ளார்.
சிங்கள தொலைக்காட்சி சேவையான தெரணவுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.
முல்லைத்தீவு, விசுவமடு சிவில் பாதுகாப்பு படைப் பிரிவுக்கு முன்னர் பொறுப்பாக இருந்த லெப்டினென்ட் கேர்ணல் ரத்னபிரிய பந்து க்கு 2018ஆம் ஆண்டு ஜனவரியில் இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது.
அதில் உடன்பாடற்ற நிலையில் அதிருப்தி காரணமாக பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னரே இராணுவ சேவையிலிருந்து ரத்னபிரிய பந்து ஓய்வுபெற்றுள்ளார்.
குறித்த இராணுவ அதிகாரியின் இடமாற்றத்தின் போது வன்னிப்பகுதியில் மக்கள் கண்ணீர் மல்க மாலைகள் அணிவித்தும், பரிசுப்பொருட்கள் வழங்கியும் வழியனுப்பி வைத்திருந்தமை நினைவுகொள்ளத்தக்கது.
மநிதர்களுள் எதிரியாக இருந்தாலும் மனிதநேயத்தோடு நடந்துகொள்ள்உம் சிலர் உலகின் பல பாகங்களில் இருக்கவே செய்கின்றனர். ஆனால் எடுத்தமாத்திரத்தில் நம்பி ஏமாறூம் நிலையில் இனிவரும் காலங்களில் தமிழர்கள் இருந்துவிடக்கூடாது. இதற்கு கடந்தகால, மற்றும் நிகழ்கால வரலாறுகள் எமக்கு வழிகாட்டியாக இருப்பதை மறந்துவிடக்கூடாது.
லெப்டினென்ட் கேர்ணல் ரத்னபிரிய பந்து வின் கடந்தகால இடமாற்றமும், அதன் பின் அவர் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னரே அதிருப்தி காரணமாக இராணுவ சேவையிலிருந்து ஓய்வுபெற்றதும், தற்போது வடக்கில் மாற்று அரசியலுக்கு தலைமைத்துவம் வழங்குவதற்கு தயாராக இருப்பதாக அறிவித்திருப்பதும் மக்கள் மனதில் இடம்பிடித்துக்கொண்டு அதனூடாக உள்னுளையும் தந்திரோபாயமாகவும் இருக்கலாம். எனவே தமிழர்கள் ஒன்றுக்கு பத்துத் தடைவைகள் எதனையும் சிந்தித்து செயலாற்றவேண்டிய காலமாக இருப்பது சுட்டிக்காட்டத்தக்கது.