
யாழ்.குடாநாட்டில் அதிகரித்துள்ள வெப்ப நிலை காரணமாக வெயில் உள்ள இடங்களில் குடி தண்ணீர் போத்தல்கள் , மென்பானங்கள் , இளநீர் போன்றவற்றை வைக்க வேண்டாம் எனவும் திறந்த வாகனங்களில் ஏற்றி வெயிலில் அவற்றை கொண்டு சென்று விற்பனை செய்வதனையும் நிறுத்துமாறும், தவறும் பட்சத்தில் அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வியாபரிகளை சுகாதார பிரிவினர் எச்சரித்துள்ளனர்.
இது தொடர்பில் சுகாதார பிரிவினர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ,
மென்பானம் மற்றும் குடிநீர் போத்தல்கள் வெயில் வைக்கப்பட்டு , அதிக வெப்பம் அவற்றின் மீது பட்டால் அவற்றில் உள்ள இராசாயன பதார்த்தங்கள் பழுதடையும் அபாயம் உள்ளது. அதனை பொதுமக்கள் வாங்கி பருகும் போது நோய்கள் ஏற்படும் சாத்தியங்கள் உண்டு. எனவே அது தொடர்பில் பொதுமக்களும் விழிப்பாக இருக்க வேண்டும். எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.