
பிரித்தானியாவில் தமது கோரிக்கைகள் தொடர்பில் பதிலளிக்க வலியுறுத்திய தமிழர்களை காவல்துறையினரை வைத்து வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் லண்டன் பகுதியின் பொறஸ்டன் றோட் இல் உள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்க அலுவலகத்திலிருந்தே நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதிகளால் இச் செயல் அரங்கேற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சம்பவ இடத்தில் நின்ற தமிழ் இளைஞர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,
தாம் கடந்த 6 மாத காலங்களாக முன்வைத்த தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதால் தமக்கு இன்று பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தி நா.த.அரசாங்க இலண்டன் அலுவலகத்தில் வந்து கேட்டதாகவும் தம்மை மதியம் 12:00 மணிமுதல் இரவு 12:00 மணிவரை காக்க வைத்து எந்த பதிலும் வழங்காமல் அராஜகமாக பிரித்தானியக் காவல்துறையினரை வைத்து தம்மை வெளியேற்றியதாகவும் கூறினார்.
அத்தோடு, அவர்களோடு இணைந்து பல பணிகளை முன்னெடுத்த தமக்கே இந்த நிலை எனில் இவர்கள் எப்படி ஒட்டுமொத்த தமிழர்கள் விடையத்தை முன்னெடுப்பார்கள் என்றும், ஜனநாயகம் இன்றி அராஜக வழியில் நடக்கும் இவர்களை ஜனனாயக செயற்பாட்டாளர்கள் என கூறுவது எனவும் வேதனையுடன் தெரிவித்தார்.
இச் சம்பவம் தொடர்பில் ஓர் இளைஞன் சம்பவ இடத்தில் நின்று தெரிவித்த கருத்துப் பதிவை காணொளியூடாக இங்கு பார்க்கலாம்.