Home தமிழகச் செய்திகள் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் மீது கோவையில் தாக்குதல்!

நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் மீது கோவையில் தாக்குதல்!

404
0

கோவையில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் மீது பா.ஜ.க தொணடர்கள் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் பேராசிரியரும், நாம் தமிழர் கட்சியின் முக்கிய உறுப்பினருமான திரு. கல்யாணசுந்தரம் அவர்கள் தெரிவிக்கையில் …

நாம் கோவையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தோம். காவல்துறையினரின் அனுமதி பெற்றே இதனை நாம் மேற்கொண்டோம்.

அபொஅடியிருக்கையில், திடீரென உட்புகுந்த பா.ஜ.க ஐச் சேர்ந்த குண்டர் படை தங்கள் தொண்டர்கள் மீது தாக்குதல் நடாத்தியது.

காவல்துறையினர் முன் நடைபெற்ற இவ் வன்முறையை கண்டிக்காது வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்ற காவல்துறையினரிடம் ஏன் இந்த வன்முறையை தடுக்கவில்லை? நாங்கள் காவல்துறை அனுமதி பெற்றுத்தானே இங்கு வந்தோம் எனக் கேட்டதற்கு …

ஆம் நாங்கள் உங்களுக்கு அனுமதி வழங்கியது உண்மைதான். அதேபோல் அவர்கள் அடிப்பதையும் வாங்கிக் கொள்ளுங்கள் என பொறுப்பற்ற தனமாக கூறியுள்ளனர் காவல் துறையினர். இவர்களின் இச் செயல் வன்மையாக கண்டிக்கப்பட்டு இவர்களுக்கு சட்டத்தின் மூலம் கண்டிக்கபட வேண்டும் என்றார்.

காணொளியை பார்க்க இங்கு அழுத்தவும்.