Home தாயக செய்திகள் சிவத்தமிழ் வித்தகர் சிவ மகாலிங்கத்துக்கு “திருமந்திர கலாநிதி” கெளரவம்!

சிவத்தமிழ் வித்தகர் சிவ மகாலிங்கத்துக்கு “திருமந்திர கலாநிதி” கெளரவம்!

243
0

சிவத்தமிழ் வித்தகர் சிவ மகாலிங்கத்துக்கு, அவர் திரும்திரத்தின் மீது கொண்ட பற்று, ஆழந்தபுலமை, ஆன்மீகச் சொற்பொழிவு என்பவற்றைக் கௌரவித்து நல்லை ஆதீனம் நல்லை ஆதீனம் திருமந்திர கலாநிதி எனும் கௌரவத்தை வழங்கியுள்ளது.

ஆதினக் குரு முதல்வர் மற்றும் பேராசிரியர்களான பாலசுந்தரம் பிள்ளை, வேதநாதன் ஆகியோர் கையொப்பம் இட்டு நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் இடம் பெற்ற சிவ மகாலிங்கத்தின் நினைவேந்தல் நிகழ்வில் வைத்து இந்தக் கௌரவம் வழங்கப்பட்டது.

சிவ மகாலிங்கத்தின் உருவப் படத்துக்கு சுடரேற்றி மலர் மாலை அணிவித்து ஆரம்பமான நினைவேந்தல் நிகழ்வில் சிவத்தமிழ் வித்தகர் சிவ மகாலிங்கம் நினைவாக சிவத் தமிழ் வித்தகம் எனும் மலரும் வெளியீடு செய்யப்பட்டது.

சிவத்தமிழ் வித்தகரது குடும்பத்தினர் இணைந்து சிவத்தமிழ் வித்தகர் சிவ மகாலிங்கம் அறக்கட்டளையை ஆரம்பித்து வைத்தனர்.

இந்த அறக்கட்டளை ஊடாக மருத்துவ உதவிகள் மற்றும் ஆன்மீக பிரசாரகர் பயிற்சி போன்றன வழங்கப்படும்.

சொல்லருவி லலீசன் தலமையில் இடம்பெற்ற நிகழ்வில் தெல்லிப்பழை துர்க்கா தேவி ஆலயத் தலைவர் ஆறு.திருமுருகன் சின்மையா மிசன் யாழ்ப்பாண வதிவிட குரு முதல்வர், பேராசிரியர் சண்முகலிங்கம், மருத்துவர்கள், அரசியல் பிரமுகர்கள் உட்படப் பலரும் கலந்து கொண்டனர்.