
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்துக்கள் நாட்டின் அரசமைப்பை மீறுகின்ற வகையில் உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் மனங்களையும் புலம்பெயர் அமைப்புகளின் மனங்களையும் வெல்லும் வகையில் கூட்டமைப்பினர் கருத்துக்களை வெளியிடுவதாகவும், ஆனால், நாம் நாட்டின் நலனையும் மூவின மக்களின் ஒற்றுமையையும் கருத்தில்கொண்டுதான் கருத்துக்களை வெளியிடுகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கலப்பு நீதிமன்றம் தொடர்பில் வெளிநாட்டுச் செய்திச் சேவை ஒன்றின் கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்;
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்த எவருக்கும் அதிகாரம் இல்லை. நாட்டின் அரசமைப்பை மீறி உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ எவரும் செயற்பட முடியாது.இலங்கையின் நிலைப்பாட்டை நாட்டின் ஜனாதிபதியும் அரச குழுவினருமே தீர்மானிப்பர். இதை மீறி எவரும் செயற்பட முடியாது. நாட்டின் இறையாண்மையைப் பாதுகாத்தும் அரசமைப்பைக் கருத்தில்கொண்டும் நாம் செயற்படுகின்றோம். இதை மீறி நாம் ஒருபோதும் நடக்கமாட்டோம். என்றார்.