
யாழ் மாநகரப் பகுதியில் “தூயநகரம்” எனும் திட்டத்தின் கீழ் இன்று சிரமதானப் பணி மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
இன்று (24/03) பொது அறிவித்தல் ஒன்றின் மூலம் யாழ் மாநகரின் பெரும் பகுதிகளை சிரமதானம் செய்ய தியாகி அறக்கொடை நிறுவனம் அழைப்பு விடுத்திருந்ததற்கு அமைய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சிரமதான அணி மற்றும் மருத்துவர்கள், கல்வியாளர்கள் பொதுக்கள் என பலர் ஆர்வத்துடன் சிரமதானப் பணிகளில் பங்கேற்றுவருகின்றனர்.

