Home உலக செய்திகள் இலண்டநில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் TIC வரதகுமாரின் இறுதி நிகழ்வு!

இலண்டநில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் TIC வரதகுமாரின் இறுதி நிகழ்வு!

262
0

சிறந்த சமூக சேவகரும், மனிதனேய செயற்பாட்டாளரும், தமிழ் தகவல் மையம் அமைப்பின் தலைவருமான (TIC) வரதகுமார் அவர்களின் இறுதி நிகழ்வு இன்று இலண்டனில் நடைபெற்று கொண்டிருக்கிறது.

பிரித்தானியாவின் நியூமோள்டன் பகுதியில் இன்று காலை 7:00 மணிக்கு ஆரம்பமான நிகழ்வில் பெருந்தொகையான மக்கள் உணர்வுபூர்வமாக கலந்துகொண்டு தமது அஞ்சலிகளை செலுத்தி வருகின்றனர்.

மக்கள் அஞ்சலி நிறைவுபெற்றதும் 10:00 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு Putney Vale Cemetery and Crematorium , Stag Lane, Wimbledon, London SW15 3DZ, UK எனும் இடத்தில் 10:45 மணிக்கு அமரர் வைரவமூர்த்தி வரதகுமார் அவர்களின் புகழுடல் தீயுடன் சங்கமிக்க உள்ளது.

40 ஆண்டு காலமாக தன்னின மக்களுக்காகவும், தமிழ் மொழியை அழியாது பாதுகாக்கவும் தன்னாலியன்றளவு சிறந்த பணியாற்றிய உன்னத ஜீவனின் பிரிவு பிரித்தானியா வாழ் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.