Home தாயக செய்திகள் வழக்கை மீளப் பெற்ற பிரதேச சபை – விகாரைப் பணி மீள ஆரம்பம்!

வழக்கை மீளப் பெற்ற பிரதேச சபை – விகாரைப் பணி மீள ஆரம்பம்!

243
0

யாழ்ப்பாணத்தின் நுளைவாயிலிலுள்ள நாவற்குழி பகுதியில் சத்தமின்றி விகாரையின் நிர்மாணவேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கூட்டமைப்பின் சாவகச்சேரி பிரதேச சபை கட்டுமானப்பணிகளிற்கு எதிராக நீதிமன்றில் தொடுத்திருந்த வழக்கினை விலக்கிக்கொண்டுள்ளமையை அடுத்தே நிர்மானப்பணிகள் மீள ஆரம்பித்துள்ளதாகவும் தெரிய வருகிறது.

மஹிந்த ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இவ் விகாரை நிர்மாணப்பணி, மற்றும் விகாரையை சூழ சிங்களக் குடியேற்றம் என்பன தற்போதைய ஆட்சியிலும் எத்தடைகளும் இன்றி தொடர்ந்தவண்ணமே உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

குறித்த  பௌத்த விகாரை நிர்மாண வேலைகளிற்கு எதிராக சாவகச்சேரி பிரதேசசபை முன்னதாக வடமாகாண முதலமைச்சரின் அறிவுறுத்தலுக்கமைய சாவகச்சேரி நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து தடை உத்தரவை பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.