Home தாயக செய்திகள் திருமலையில் விபத்து – மகன் பலி, தந்தை படுகாயம்!

திருமலையில் விபத்து – மகன் பலி, தந்தை படுகாயம்!

208
0

திருகோணமலை -ஹொரவபொத்தானை பிரதான வீதியில் டிப்பர் ரக வாகனம் மோதியதில் ஒருவர் பலியாகியுள்ளதோடு இன்னொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று இடம்பெற்ற இவ் விபத்தில் கல்பிட்டி – கந்தகுலிய, குறிஞ்சாம்பிடிய பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய தனுஷ்க மதுரங்க என்ற இளைஞனே உயிரிழந்தவராவார். அத்தோடு படுகாயமடைந்த நபர் 39 வயதுடைய அன்டனி எலிஸ் ரொஷான் எனவும், இவர் விபத்தில் இறந்த தனுஷ்க மதுரங்கவின் தந்தை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தந்தையும், மகனும் கல்பிட்டி பகுதியிலிருந்து திருகோணமலை நோக்கி மீன் எடுப்பதற்காக பட்டா வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, பின் புறமாக வந்த டிப்பர் ரக வாகனம் ஒன்று மோதியதனாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் விபத்தை ஏற்படுத்தி ஒருவரின் உயிரிழப்பிற்கு காரணமான டிப்பர் வாகன சாரதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.