Home தாயக செய்திகள் வீட்டுத்திட்ட நிதி வழங்கப்படாததை கண்டித்து மக்கள் போராட்டம்:

வீட்டுத்திட்ட நிதி வழங்கப்படாததை கண்டித்து மக்கள் போராட்டம்:

232
0

வீட்டுத்திட்டத்திற்கான நிதி வழங்கப்படவில்லை என கோரி வவுனியா பாரதிபுரத்தில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

2018 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட 146 வீடுகளிற்கான அடிக்கல் நாட்டப்பட்டு வேலைத்திட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இவ் வீட்டுத்திட்டங்களிற்கான நிதி சீரான முறையில் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த ஆர்ப்பாட்டம்  இன்று காலை பாரதிபுரம் பலநோக்கு மண்டபத்திற்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டது.

இப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கூறுகையில்,

ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான ஒவ்வொரு வீட்டுக்கும் கட்டம் கட்டமாக நிதி வழங்கப்பட்ட நிலையில் கடந்த வருடம் நாட்டில் நிலவிய அரசியல் குழப்பம் போன்ற பல்வேறு விடயங்களால் அடுத்த கட்ட நிதிகள் இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் வீடுகளை கட்டி முடிக்கமுடியாமல் உள்ளது.

2018ஆம் ஆண்டு வீட்டுத்திட்டம் வழங்கப்படும் போது காணப்பட்ட மணல், சீமெந்து போன்ற கட்டட பொருடகளின் விலைகள் தற்போது உயர்ந்துள்ளமையினால் குறித்த ஐந்து இலட்சம் ரூபாவில் எவ்வாறு மிகுதி வேலைகளை முடிப்பது என்ற நிலை தற்போது உருவாகியுள்ளதால் நாம் தற்போது மேலும் கடனாளியாகியுள்ளோம் என தெரிவித்தனர்.