Home செய்திகள் நாடுகளின் நலன் சார்ந்த ஐ.நா அறிக்கை: அமைச்சர் மாணிக்கவாசகர்

நாடுகளின் நலன் சார்ந்த ஐ.நா அறிக்கை: அமைச்சர் மாணிக்கவாசகர்

249
0

சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானமானமானது, பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளுக்கு மாறாக, நாடுகளின் நலன் சார்ந்து நிறைவேற்றப்பட்டுள்ளது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அனைத்துலக விவகாரங்களுக்கான அமைச்சர் மாணிக்கவாசகர் கருத்து வெளியிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

தமிழினத்தின் மீதான போர்க்குற்றங்களுக்கும், இனப்படுகொலைக்கும் சிறிலங்காவை பொறுப்புக்கூற வைக்க அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் அல்லது அதற்கு சமனான அனைத்துலக தீர்பாயங்களே பொருத்தம்.

அதுதான் எமது நிலைப்பாடும் எதிர்பார்ப்பும். அதனை நோக்கிய தமது செயற்பாடு தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.

ஈழத்தமிழர்களின் நீதிக்கான செயல்வழிப்பாதையும் ஜெனிவா மட்டுமல்ல, அதற்கும் அப்பாலும் நமக்கான வாய்ப்புக்கள் அனைத்துலக அரங்கில் இருக்கின்றது என்பதனை சுட்டிக்காட்டிய அமைச்சர் மாணிக்கவாசகர், நடந்துள்ள ஐ.நாவின் 40வது கூட்டத் தொடர் தமிழர் தரப்புக்களை ஒற்றைப்புள்ளியில் இணைத்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.