Home தமிழகச் செய்திகள் தேர்தலில் தீபாவின் திடீர் திருப்பம் – அ.தி.மு.க விற்கு ஆதரவு என அறிவிப்பு!

தேர்தலில் தீபாவின் திடீர் திருப்பம் – அ.தி.மு.க விற்கு ஆதரவு என அறிவிப்பு!

184
0

முன்னர் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி என அறிவித்திருந்த எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையின் தலைவர் தீபா தற்போது அ.தி.மு.க வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதனால், அ.தி.மு.க உருவாக்கியுள்ள மெகா கூட்டணி மேலும் பலம் வாய்ந்ததாக மாறியுள்ளது.

நான் தனித்துபோட்டியிட்டால் அ.தி.மு.க தொண்டர்கள் வருத்தப்படுவார்கள் என எண்ணியே இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்த தீபா அ.தி.மு.க வின் வெற்றிக்காக எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை கடுமையாக உழைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தேர்தலுக்கு பின்னரே அ.தி.மு.க வுடன் இணைவதா இல்லையா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். 

வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, தினகரன் கட்சி, சீமான் கட்சி, கமல் கட்சி ஆகிய ஐந்து முனை போட்டி உறுதியாகியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.