Home முக்கிய செய்திகள் இராணுவத்தின் போர்க்குற்ற ஆதாரங்கள், வெள்ளைக் கொடி விவகார குரல் பதிவு: பொன்சேகா

இராணுவத்தின் போர்க்குற்ற ஆதாரங்கள், வெள்ளைக் கொடி விவகார குரல் பதிவு: பொன்சேகா

240
0

இராணுவத்தினர் சிலர் மிலேச்சத்தனமாக செய்த கொடூரங்கள் அடங்கிய ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக முன்னாள் இராணுவத் தளபதியும், பீல்ட் மார்ஸலுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினர் செய்த சடவிரோதமான நடவடிக்கைகள் அடங்கிய காணொளிகள் உட்பட இறுதிப் போரின் போது மிக முக்கியவிடையமான வெள்ளைக் கொடி விவகாரம் குறித்த குரல் பதிவுகள் அடங்கிய ஒலிப் பதிவும் தன்னிடம் இருப்பதாகவும் சரியான நேரம் வரும் போது தான் அதனை வெளியிடவுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இராணுவ வரலாறு மற்றும் அரசியல் பக்கங்களில் இருந்தும் சரத் பொன்சேகா ஓரங்கட்டப்பட்டுவரும் நிலையில் அச்சதை ஏற்படுத்தி அதனூடாக தனக்கான ஓர் அதியுயர் இடத்தை பிடிக்கும் நோக்கோடு சரத் பொன்சேகா இக்கருத்தை தற்போது வெளியிட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

எது எவ்வாறாயினும் தன்போது ஊடகங்கள் முன்னிலையில் அவர் வெளியிட்டுள்ள இக் கருத்திற்கிணங்க போர்க்குற்ர விசாரணை நடைபெற்றால் தன்னிடம் உள்ளதாக சொல்லப்பட்ட அத்தனை ஆதாரங்களையும் கொடுக்க வேண்டிய நிலையில் சரத் பொன்சேகா சிக்கியுள்ளார்.