Home தாயக செய்திகள் புளியம்பொக்கணை நாகதம்பிரானுக்கு பண்டங்கள் எடுத்துச் செல்லும் பாரம்பரிய நிகழ்வு!

புளியம்பொக்கணை நாகதம்பிரானுக்கு பண்டங்கள் எடுத்துச் செல்லும் பாரம்பரிய நிகழ்வு!

257
0

கிளிநொச்சி – புளியம்பொக்கணை நாகதம்பிரான் கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு பண்டங்கள் எடுத்துச் செல்லும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறைக்கு அமைவாக தென்மராட்சி பிரதேசத்தில் சேகரித்த பண்டங்களே மீசாலை பந்தமரவடியில் இருந்து மாட்டுவண்டில்களில் புளியம்பொக்கணை நாகதம்பிரான் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.