Home செய்திகள் தமிழர் தீர்விற்கு அரசியல் தேவையில்லை – மனிதாபிமானம் போதும் என்கிறார் ஆளுனர் சுரேன்:

தமிழர் தீர்விற்கு அரசியல் தேவையில்லை – மனிதாபிமானம் போதும் என்கிறார் ஆளுனர் சுரேன்:

234
0

மனிதாபிமான முறையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அரசியல் தேவையில்லை என வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பிரதிநிதிகள் குழுவின் ஓர் அங்கமாக ஜெனிவா சென்றுள்ள அவர்,  ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும்  , நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஆசை தனக்கு இல்லை எனக் குறிப்பிட்ட ஆளுனர் சுரேன், வடக்கின் ஆளுநராக தான் இருக்கும்வரை, தமிழர்களது பிரச்சினைக்காக எல்லா வழிகளிலும் போராடத் தயார் எனவும், தமிழ் மக்களுக்கு எந்த அளவிற்கு சேவை செய்ய முடியுமோ அந்த அளவிற்கு தான் சேவை செய்ய தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தார்.