Home உலக செய்திகள் இத்தாலியில் – 51 பாடசாலை சிறுவர்களுடன் பேரூந்து தீக்கிரை!

இத்தாலியில் – 51 பாடசாலை சிறுவர்களுடன் பேரூந்து தீக்கிரை!

179
0

ஆசிரியர்கள் உட்பட பாடசாலை சிறுவர்கள் 51 பேருடன் சென்ற பேரூந்து ஒன்று இத்தாலியில் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளது.

செனகலை பூர்வீகமாக கொண்டவரும், இத்தாலி குடியுரிமை பெற்றவருமான குறித்த வாகனத்தை ஓட்டிச் சென்ற 47 வயதுடைய சாரதியே இக் கொடூர செயலை மேற்கொண்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது;

குறித்த பேருந்து பள்ளியில் இருந்து உடற்பயிற்சிக்கூடம் செல்ல வேண்டிய நிலையில், சாரதி பேருந்தை வேறொரு வழியில் ஓட்டிச்சென்றுள்ளார்.

பிந்நர் பேருந்தில் பயணித்தவர்களை சந்தேக நபர் ஒரு கத்தியை காட்டி மிரட்டியபோது, பேருந்தில் இருந்த ஒரு மாணவன் தனது பெற்றோருக்கு இது குறித்து மொபைலில் தகவல் கூறியுள்ளான். அச் சிறுவனின் துரித செயலே இறுதியில் அநைவரையும் காப்பாற்றியுள்ளது.

உடனடியாக பேருந்தை இடைமறிக்க அதிகாரிகள் முயன்றபோது சுற்றிலும் இருந்த போலீஸ் வாகனங்களுடன் மோதி பின்னர் பேருந்து நின்றுள்ளது.

பேருந்து நிறுத்தப்பட்டவுடன், உடனடியாக கீழே குதித்த ஓட்டுநர் பேருந்துக்கு தீ வைத்துள்ளார்.

பேருந்தின் உள்ளே இருந்தவர்களை காப்பாற்ற வாகனத்தின் பின்புறம் மற்றும் பக்கவாட்டில் உள்ள கண்ணாடிகளை உடைத்து பயணித்தவர்களை போலீசார் மீட்டுள்ளனர்.

அத்தோடு குறித்த சாரதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் இத்தாலியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.