Home செய்திகள் வவுனியாவில் – வெட்டுக் காயங்களுடன் இளம் பெண் சடலமாக மீட்பு!

வவுனியாவில் – வெட்டுக் காயங்களுடன் இளம் பெண் சடலமாக மீட்பு!

193
0

வவுனியா – நெலுக்குளம் பகுதியில் இளம் பெண்ணொருவரின் சடல வெட்டுக் காயங்களுடன் கிணற்றில் இருந்து சடலாமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.

32 வயதுடைய இருபிள்ளைகளின் தாயாரான கெளரி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது;

குறித்த பெண்ணிற்கு வெளிநாட்டிலிருந்து கணவன் நேற்றிரவு 11.30 மணிக்கு பின்னர் தொலைபேசி அழைப்பு மேற்கொண்டுள்ளார். எனினும் பெண் அழைப்பினை எடுக்கவில்லை. சந்தேகத்தில் அயல் வீட்டார் ஒருவருக்கு, பெண்ணின் கணவன் தொலைபேசி அழைப்பு மேற்கொண்டு மனைவி தொலைபேசி அழைப்பினை எடுக்கவில்லை சற்று சென்று பார்க்குமாறு தெரிவித்துள்ளார்.

அயல் வீட்டார் குறித்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற நேரத்தில் பெண்ணின் இரு பிள்ளைகளும் அவர்களுக்கு பாதுகாப்பாக இருந்த பெண்ணும் உறங்கி கொண்டிருந்த போதும், பிள்ளைகளின் தாயை காணவில்லை.

உடநடியாகவே பதற்றத்தோடு அயலில் உள்ளவர்களும் சிலர் கூடி அவரை தேட ஆரம்பித்துள்ளனர். வீட்டிலுள்ள அறைகளை சென்று பார்த்த போது ஒரு அறையில் இரத்தம் காணப்பட்டுள்ளது. இதன் பின்னரே பாவனையற்ற கிணற்றில் சடலம் மிதப்பதை அயலவர்கள் அவதானித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த குற்றத்தடவியல் தடைய காவல்துறையினரால் கிணற்றுக்கு அண்மையாக இருந்து கத்தியொன்று மீட்கப்பட்டுள்ளது. கொலைச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை நாடாத்தி வருகின்றனர்.