Home செய்திகள் யுத்தக் குற்றங்கள் நிரூபிக்கப் படுமாயின் சாட்சியளிக்க தயார்: சரத் பொன்சேகா

யுத்தக் குற்றங்கள் நிரூபிக்கப் படுமாயின் சாட்சியளிக்க தயார்: சரத் பொன்சேகா

180
0

யுத்த செயற்பாடுகளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினர் தமது சுய அரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்திக் கொண்டமையினாலேயே இன்று இலங்கை சர்வதேச விசாரனைகளை அனுகவேண்டிய நிலை உருவாகியுள்ளதாக சரத் பொன்சேகா தெரிவித்தார்.

களனி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட சரத் பொன்சேகா ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

மேலும் கருத்து தெரிவித்த அவர்;

இலங்கையில் இடம்பெற்ற யுத்தகாலத்தில் இடம்பெற்ற குற்றசெயல்கள் தொடர்பில் சர்வதேசத்தின் விசாரனைகளில் இருந்து வெளியேற வேண்டுமானால் குற்றவாளிகள் மீதான விசாரணைகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்றார்.

யுத்தகாலத்தில் இடம்பெற்ற குற்றங்கள் நிரூபிக்கபடுமாயின் தான் எந்தவொரு நிதிமன்றத்துக்கும் வந்து பதிலளிக்க தயாராக உள்ளதாகவும் அவர் கூறியுள்லார்.