Home உலக செய்திகள் பிரித்தானியாவில் ஈழத் தமிழர் குத்திக் கொலை – மனைவி கைது!

பிரித்தானியாவில் ஈழத் தமிழர் குத்திக் கொலை – மனைவி கைது!

254
0

பிரித்தானியாவில் 57 வயதான இலங்கைத் தமிழர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடை உரிமையாளரான ராஜசிங்கம் குமாரதாஸ் என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது;

பிரித்தானியாவின் Norfolk, Wymondham பகுதியில் Burdock Close இல் கடந்த சனிக்கிழமை இரவு 11.50 மணியளவில் இக் கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பிரித்தானியாவின் Norfolk பிராந்திய காவல்துறையினர் தலை, மற்றும் நெஞ்சு பகுதிகளில் கத்திக் குத்துக் காயங்களுடன் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த குமாரதாஸ் ராஜசிங்கம் என்பவரை உடனடியாக வைத்தியசாலையில் (Norfolk and Norwich University Hospital) அனுமதித்துள்ளனர். இருந்தும் சிகிச்சை பலனின்றி குறித்த நபர் வைத்தியசாலையில் மரணமாகியுள்ளார்.

விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர் கொலையுண்ட நபரின் மனைவியே கணவனை கொலைசெய்தார் எனும் சந்தேகத்தில் குமாரதாஸின் மனைவியான ஜெயமலர் என்பவரை கைது செய்துள்ளனர். அத்தோடு அவர்களின் வீட்டையும் விசாரணைகள் முடியும் வரை காவல்துறையினர் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.

இது தொடர்பான செய்திகளை பார்க்க….