Home தமிழகச் செய்திகள் தேர்தல் அறிக்கையில் திருத்தம் செய்த தி.மு.க!

தேர்தல் அறிக்கையில் திருத்தம் செய்த தி.மு.க!

249
0

தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும் நேற்று வெளியாகியிருந்த நிலையில் இன்று (19/03) தி.மு.க தனது அறிக்கையில் திருத்தம் செய்து மீண்டும் வெளியிட்டுள்ளது.

கூட்டணி கட்சிகளின் ஒப்புதலோடே தி.மு.க வின் தேர்தல் அறிக்கையில் இம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

திருத்தத்தின் பின் வெளியான அறிக்கையில் அனைத்து விவசாயிகளின் வங்கிக்கடனும் ரத்து செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் 80,000 கோடி விவசாயகடன் தள்ளுபடியாகும் என தெரிகிறது.

நேற்று வெளியான தி.மு.க வின் அறிக்கையில் சிறு, குறு விவசாயிகளின் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தமையே இன்று ஏனைய கட்சிகளின் தேர்தல் அறிக்கையை பார்த்த பின் திருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.