Home செய்திகள் சிறீலங்கா அரசாங்கத்தினால் 48 ஊடகவியலாளர்கள் படுகொலை: ஐ.நா வில் கஜேந்திரகுமார்

சிறீலங்கா அரசாங்கத்தினால் 48 ஊடகவியலாளர்கள் படுகொலை: ஐ.நா வில் கஜேந்திரகுமார்

210
0

போர் நடந்த காலப்பகுதியில் சிறிலங்காவில் 41 தமிழ் ஊடகவியலாளர்கள் உட்பட 48 ஊடகவியலாளர்கள் சிறிலங்கா அரசாங்கத்தினால் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக ஐ.நா வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவில் இன்று வரை ஊடகவியலாளர்களுக்கு எதிரான அரசாங்கத்தினது நெருக்குவாரங்கள் தொடர்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், சிறீலங்கா அரசாங்கம் வன்முறையை கையிலெடுத்தபோது அதற்கான எதிர்வினையாக தமிழர் தரப்பும் ஆயுதத்தை கையில் எடுக்கநேர்ந்த்து என்றும் தெரிவித்துள்ளார்.

நேற்றய தினம் (19/03) இடம்பெற்ற 40 ஆவது அமர்வின் 08 விடயமாக நடைபெற்ற பொது விவாதத்தில் உரையாற்றியபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.