Home செய்திகள் வெளியானது நாம் தமிழர் கட்சி “தேர்தல்” சின்னம் – 23 இல் வேபாளர் பட்டியல் வெளியீடு:

வெளியானது நாம் தமிழர் கட்சி “தேர்தல்” சின்னம் – 23 இல் வேபாளர் பட்டியல் வெளியீடு:

702
0

மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் கரும்பு விவசாயி சின்னத்தை அக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் வெளியிட்டு வைத்ததோடு, எதிர்வரும் 23-ம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் சின்னத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடந்தது.

கட்சி சின்னத்தை அறிமுகப்படுத்தி பத்திரிகையாளர்களிடையே பேசும்போது , கட்சியின் தேர்தல் சின்னமாக இரட்டை மெழுகுவர்த்தி கேட்கப்பட்டது. ஆனால், அச்சின்னம் ஒதுக்கப்படவில்லை. பதிலாக, கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. 

இது தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள சீமான், `மற்றவர்களைப் போல், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதைச் செய்வோம் இதைச்செய்வோம் என்று அல்லாமல் நாட்டு மக்களுக்காக உரக்கக் குரல் கொடுப்பேன்’ என்றவர், ‘தேர்தல் ஆணையம்  கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கியுள்ளது.

ஏனெனில், உயிர் கொடுத்தாவது விவசாயிகளை நான் காப்பேன் என்பதற்காகத் தான். உயிர்கள் இல்லை என்றால் உலகம் இல்லை; உழவை மீட்டு உலகைக் காப்போம்’ என்ற முழக்கத்துடன் தேர்தலை எதிர் கொள்வோம் என்றார்.

தேர்தலில் வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும். வரும் 23-ம் தேதி, நாம் தமிழர் சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்படும்” என்றார் சீமான்.