
நீதிக்கான மக்கள் எழுச்சி’ எனும் தொனிப்பொருளில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணத்தில் இன்று பூரண ஹர்த்தால் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தியே இந்த பூரண ஹர்த்தாலும், நீதிக்கான பேரணியும் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய இந்த மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணியில் முன்னாள் வடமாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான விக்னேஸ்வரன்ஸ்வரன் உட்பட பல அரசியல் தாலைவர்கள், சிவில் அமைப்பு பிரதினிதிகள், மதத் தலைவர்கள், மாணவ சமூகம் என பலரும் கலந்துகொண்டு தமது ஆதரவை வழங்கியுள்ளனர்.
அத்தோடு இப் போராட்டத்திற்கு ஆதரவாக வடமாகாணத்தின் பல பகுதிகளில் ஹர்த்தால் அறிவிக்கப்பட்டு வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

