Home செய்திகள் யாழ் – கீரிமலையில் இடம்பெற்ற மாட்டுவண்டிச் சவாரி போட்டி:

யாழ் – கீரிமலையில் இடம்பெற்ற மாட்டுவண்டிச் சவாரி போட்டி:

239
0

யாழ் – கீரிமலையில் தமிழர் பண்பாட்டின் வீர விளையாட்டுக்களில் ஒன்றான மாட்டுவண்டிச் சவாரி போட்டி இடம்பெற்றது.

யாழ்ப்பாண மாவட்ட சவாரி சங்கத்தின் அனுசரணையுடன் வலி.வடக்கு சவாரி சங்கத்தின் ஏற்பாட்டில் வலி. வடக்கின் சவாரி திடலான கருகம்பனை சீதாவளை சவாரித்திடலில் இப் போட்டி இடம்பெற்றது.

இப் போட்டிகளில், வயதானோர் உட்பட இளையோர் பலரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டிருந்தனர்.

இப் போட்டி நிகழ்வு குறித்து ஸ்ரீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றிய யாழ் மாவட்ட தலைவர் வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர் பொன்னம்பலம் ஆதவன் தெரிவிக்கையில்…

தமிழர்களாகிய நாம் கலை, கலாச்சார பண்பாட்டு ரீதியாகவும், மரபாகவும் சரி, என்றும் நாம், வல்லரசே என்பதை பெருமிதத்துடன் இவ் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வில் தெரிவித்து கொள்கிறேன். ஆரோக்கியமான எமது பாரம்பரியமான மரபு விளையாட்டுக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். நாம் அவற்றை உரிய முறையில் கடைப்பிடித்து பாதுகாக்க வேண்டுமே தவிர,யாரும் இவற்றை மலினப்படுத்த முடியாது. அதற்கு இடமளிக்கவும் முடியாது என்றார்.