Home செய்திகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர உள்ள வடமாகாணத்தின் 14 பாடசாலைகள்!

தேசிய பாடசாலைகளாக தரமுயர உள்ள வடமாகாணத்தின் 14 பாடசாலைகள்!

182
0

வடமாகாணத்தின் 14 மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த உள்ளதாக ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

குறித்த 14 பாடசாலைகளும் மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் கட்டாயம் பிரதிநிதித்துவம் செய்யவேண்டுமென்றும் அவற்றை தெரிவு செய்து அனுப்பும் பொறுப்பு அந்தந்த மாவட்டங்களின் மக்கள் பிரதிநிதிகளுக்கே உள்ளதெனவும் குறிப்பிட்ட ஆளுனர் சுரேன் ராகவன், அதனை கூடியவிரைவில் தமக்கு அனுப்பிவைக்குமாறும் தெரிவித்தார்.

ஏனைய எட்டு மாகாணங்களுடன் ஒப்பிடும்போது 2 சதவீதமாக காணப்படும் தேசிய பாடசாலைகளை அதிகரித்து 3.5 சதவீதமாக கொண்டுவரும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

வடமாகாணத்தின் பல பாடசாலைகளின் பழைய மாணவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தமது பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்துவதற்கான அனுமதியினை வழங்க வேண்டுமென்ற கோரிக்கையினை அண்மைக்காலமாக ஆளுநரிடம் முன்வைத்து வருகின்ற நிலையிலேயே ஆளுநர் மேற்குறிப்பிட்ட தீர்மானத்தினை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.