Home தமிழகச் செய்திகள் தூத்துக்குடியில் கனிமொழிக்காக பிரச்சாரத்தில் ஈடுபடும் வைகோ!

தூத்துக்குடியில் கனிமொழிக்காக பிரச்சாரத்தில் ஈடுபடும் வைகோ!

184
0

தி.மு.க வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரச்சாரம் செய்யவுள்ளார்.

மிகப்பெரும் மக்கள் ஆதரவுடன் பெரும் கட்சியாகவும், சிறந்த தலைவராகவும் இருந்துவந்த வைகோ அவர்களிடம் கடந்த சில வருடங்களில் காணப்பட்ட மாற்ரங்களால் மிக மிக கீழ் இறங்கி இன்று ஒரு தொகுதிக்காக தான் எதிர்த்துவந்தவர்களிடமே போய் கூட்டுச் சேர்ந்து நிற்கும் அவல நிலையில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.

தூத்துக்குடி மக்களின் மிகப்பெரிய வாழ்வாதாரப் பிரச்சனையாக இருந்த வேதாந்தாவின் ஸடெர்லைட் ஆலையை இழுத்து மூடவைத்ததில் வைகோவுக்கும் மிகப்பெரிய பங்குண்டு. அந்த வகையில் தூத்துக்குடி மக்களிடம் நல்மதிப்பைப் பெற்றிருக்கும் வைகோ பிரச்சாரத்தில் ஈடுபட்டால் அது திமுகவுக்கு மேலும் பலமாக அமையும் என்பதால் வைகோவின் பிரச்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

திமுக கூட்டணியில் போட்டியிடப்போகும் வேட்பாளர்களின் பட்டியலை நேற்று திமுக வெளியிட்டது. அதில் தி.மு.க முன்னாள் முதல்வர் கலைஞரின் மகளும் ஸ்டாலினின் தங்கையுமான கனிமொழிக்கு தூத்துக்குடியில் சீட் ஒதுக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர் எதிர்வரும் 22 ஆம் திகதியன்று தூத்துக்குடியில் பிரச்சாரம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.