Home தாயக செய்திகள் சுகததாச உள்ளரங்கு போன்று கிளிநொச்சியில் விளையாட்டரங்கு:

சுகததாச உள்ளரங்கு போன்று கிளிநொச்சியில் விளையாட்டரங்கு:

247
0

6 மாதங்களுக்குள் சுகததாச உள்ளரங்கு போன்று வெளிச்சமூட்டிய விளையாட்டரங்கொன்றை அமைத்து தருவதாக தொலைத்தொடர்புகள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வாக்குறுதியளித்துள்ளார்.

இங்குள்ள வீர வீராங்கனைகள் சாதனையாளர்களாக மாறுவதற்கு இந்த விளையாட்டரங்கு உதவியாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட வட. மாகாண விளையாட்டுக்கள் கட்டிட தொகுதியை நேற்று ஞாயிற்றுக்கிழமை பாவனைக்கு கையளிக்க்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்படி வாக்குறுதியினை வழங்கியுள்ளார்.

2011 ஆம் ஆண்டு இந்த மைதானத்திற்காக அடிக்கல் நாட்டப்பட்ட போதும் நீண்ட காலத்திற்கு பின்னரே இதை திறந்து வைக்க முடிந்துள்ளதாகவும் இது போல் அல்லாது ஆறு மாதத்திற்கும் அடுத்த சுகததாச உள்ளரங்கு போன்று வெளிச்சமூட்டிய விளையாட்டரங்கொன்றை அமைத்து தருவதாகவும் அவர் தெரிவித்தார்.