Home செய்திகள் மாற்றுத் திறணாளிகளுக்கு கலையால் கரம் கொடுக்கும் மாபெரும் நிகழ்வு!

மாற்றுத் திறணாளிகளுக்கு கலையால் கரம் கொடுக்கும் மாபெரும் நிகழ்வு!

287
0

கலையால் கரம் கொடுத்து மாற்றுத்திறணாளிகளுக்கு உதவும் நிகழ்வு ஒன்று நேற்று இலண்டனில் நடைபெற்றது.

மாற்றுத்திறணாளிகள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் உயரிய நோக்கோடு பிரித்தானியாவை தளமாகக் கொண்டியங்கும் DATA எனும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் இவ் நிகழ்வு நேர்ரைய தினம் (16/03) இலண்டன் ஹறோ பகுதியில் பிரம்மாண்டமாக இடம்பெற்றது.

ஐரோப்பிய கலைஞ்ஞர்கள் சங்கமித்த இம் மாபெரும் நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு மகிழ்வடைந்ததோடு மாற்றுத்திறணாளிகளுக்கான தமது பங்களிப்பையும், அதற்காக பணி செய்யும் DATA தொண்டு நிறுவனத்திற்கு தமது ஆதரவையும் வழங்கியிருந்தனர்.

மங்கள விழக்கேற்றலுடன் ஆரம்பமான இந் நிகழ்வில் DATA கடந்தகால செயற்பாடுகள் மற்றும் தேவைகள் குறித்து அதன் இயக்குனர்களான ஜீவாகரன், சம்பந்தன் ஆகியோர் விபரித்ததோடு மாற்றுத்திறணாளிகள் தொடர்பான குறும் விவரணக் காட்சியும் அகன்ற திறையில் காட்சிப்படுத்தப்பட்டது.

ஆடல், பாடல், நகைச்சுவை என அனைவரும் மகிழும் வண்ணம் இன் நிகழ்வு தொய்வின்றி அனைவரையும் மகிழ்விக்கும் முகமாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.