Home தமிழகச் செய்திகள் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல்!

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல்!

172
0

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து வகுப்புகளைப் புறக்கணித்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரி மாணவிகள், மாணவர் அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலரை காவல்துறையினர் தாக்கியுள்ளனர்.

புதுக்கோட்டை எஸ்பி செல்வராஜ் தலைமையில் அங்கு திரண்ட போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களைக் கலைந்து செல்ல காவல்துறையினர் வலியுறுத்திய போதும் மாணவிகள் கலைந்து செல்ல மறுத்து, தொடர்ந்து கண்டனக் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

கடும் வாக்குவாதம் ஏற்பட்டததை அயடுத்து, போராட்டத்தைத் தூண்டியதாக, மாணவர் சங்கத்தைச் சேர்ந்த அரவிந்த சாமி உட்பட மற்றும் சிலரை போலீஸார் கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றும் போதே காவல்துறையினர் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

அப்போது காவல்துறையின் வாகனத்தை நான்குபுறமும் சுற்றி வளைத்து கைது செய்தவர்களை விடுவிக்க வேண்டும் எனக்கூறி தொடர் போராட்டத்தில் மாணவிகள் ஈடுபட்டதனால் ஒரு மணி நேரத்தின் பின்னர் கைது செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

காவல்துறையின் தாக்குதலில் காயமடைந்த மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.