
1987 பல்கலைக் கழக மாணவர்கள் பகிடிவதை காரணமாக தமது கல்வியை கைவிட்டுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
யாழ் பல்கலைக்கழகத்தின் வன்னி அல்லது வவுனியா வளாகம் விரைவில் தனியான பல்கலைக்கழகமாக அறிவிக்கப்படும் என்றும் அவர்கூறினார்.
அவர் மேலு தெரிவிக்கையில்;
பாராளுமன்றத்தில் இதனை தெரிவித்த அவர் பகிடி வதைக்கு எதிராக அரசாங்கம் எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்காத நிலையில் பகிடிவதை இன்னமும் தொடர்கிறது. பகிடி வதையை தடுக்கும் வகையில் துணைவேந்தர்க்களுக்கும் கவுன்சிலர்களுக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் பாலியல் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் வன்முறைகள் தொடர்பில் முறைபாடுசெய்யும் தொலைபேசி ஏற்பாடு ஒன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.