Home செய்திகள் இலங்கையர்கள் 4 பேருக்கு சர்வதேச பிடியாணை:

இலங்கையர்கள் 4 பேருக்கு சர்வதேச பிடியாணை:

176
0

இலங்கையர்கள் 4 பேருக்கு எதிராக சர்வதேச பொலிஸாரினால் சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சஜீவ டி சொய்சா எனப்படும் கொஸ்கொட சுஜீ, எமில் லக்ஷ்மி காந்த், முனுசாமி தவசீலன், விக்னராசா செல்வாதன் ஆகிய 4 பேருக்கே இந்த விசேட சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இடம்பெற்ற கொலைகளுக்கு எதிராக கொஸ்கொட சுஜீக்கு விசேட சிவப்பு பிடியாணை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏனைய 10 பேருக்கு எல்லை சட்டத்தை மீறி குற்றம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எல்லை சட்டத்தை மீறி வெளிநாடுகளில் இருந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவர்களுக்கே இந்த சிவப்பு பிடியாணை விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.