Home தாயக செய்திகள் யாழில் அலையென திரண்ட மக்கள் வெள்ளம்!

யாழில் அலையென திரண்ட மக்கள் வெள்ளம்!

202
0

யாழ் பல்கலைக்கழக மாணவர், மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் ஒன்றியத்தால் ஏற்பாட்டில் இன்று யாழில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மாபெரும் கவனயீர்பு ஆர்ப்பாட்ட பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அலையென திரண்டு யாழ் நகரையே நிரப்பியுள்ளனர்.

சிறீலங்கா பேறினவாத ஆட்சியாளர்களின் ஆட்சிக்காலங்களில் சிறீலங்காப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றம், இனப்படுகொலை, மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதிக்காக சர்வதேச விசாரணை நடாத்தப்பட வேண்டும் எனவும், சிறீலங்காவிற்கு கால அவகாசம் வழங்கக்கூடாது அனவும் வலியுறுத்தி இப் பேறணி இன்று நடைபெறுகிறது.

இப் பேரணிக்கான யாழ் பல்கலைக்கழக மாணவர், மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் ஒன்றியத்தின் அழைப்பை ஏற்று கட்சி பேதமின்றி பல அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள், வர்த்தகர் சங்கங்கள், மதத்தலைவர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்களும் தங்கள் ஆதரவை வழங்கியுள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பித்த பேரணி அங்கிருந்து பலாலி வீதியூடாக , யாழ்.மாநகர சபை மைதானத்தைச் சென்றடைந்தது.